மாணவர் எழுச்சியை குழப்ப முயற்சி! புலனாய்வாளர்கள் களத்தில்
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து இலங்கையின் சுதந்திர தினத்தை ஒரு கரி நாளாகப் பிரகடனம் செய்து மேற்கொண்டுவருகின்ற போராட்டத்தை குழப்புவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இலங்கை புலனாய்வுப் பிரிவினர் சிங்கக் கொடிகளுடன் ஊர்வலத்தின் மத்தியில் ஊடுருவி முழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும், அருன் என்ற நபர் 40 பேருடன் தங்களுடைய பேரணியைக் குழப்புவதற்கு முயன்றதாகவும், அவரின் அந்தச் செயலுக்கு 400 பொலிசார் பாதுகாப்பு வழங்கியதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தார்கள்.
கிழக்கில் பேரணி ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்த கிழக்கு பல்கலைக்கழக மானவர்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினரும், பிள்ளையான் கும்பலும் மிரட்டி, அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, அவர்களில் சிலரை ஏற்பாடுகளைக் கைவிட்டுவிட்டுச் செல்லும்படி செய்துள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
