மாணிக்கக்கல் கொத்தணி பற்றிய செய்தி பொய்யானது – ஐ.தே.க
மாணிக்கக்கல் கொத்தணி பற்றிய செய்தி பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் இரத்தினபுரியில் மாணிக்கக்கல் கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் மக்களை திசை திருப்பும் நோக்கிலானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பிரச்சினைகளை மூடி மறைக்கவே இந்த மாணிக்கக்கல் கொத்தணி பற்றி செய்தி வெளியிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலி எல்ல பகுதியில் இன்று கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னதாக தம்மிக்க பாணி என்றதொரு செய்தி வெளியிடப்பட்டு மக்கள் திசை திருப்பப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி முதல் இதுவரையில் கொவிட் காரணமாக 1600 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கொவிட் நிலைமைகள் மோசமடைந்துள்தளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர அவசரமாக இரசாயன உரத்தை தடை செய்ததன் மூலம் அடுத்த ஆண்டு மக்கள் பட்டினியை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொற்று நிலைமைகளில் அரசாங்கத்தினால் இணைய வழி கல்வியை வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு டெப்களை வழங்கும் திட்டம் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கபட்டதாகவும் அதனை அப்போதைய ஜனாதிபதி மைத்திரி தடுத்து நிறுத்தியதாகவும் ருவான் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam