புதுமண தம்பதிக்கு நேர்ந்த பெரும் துயரம் - கணவன் மரணம் - ஆபத்தான நிலையில் மனைவி
திருகோணமலை, ஹபரன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்ற 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம பிரதேசத்தை சேர்ந்த மிலான் பிரமுக்க விஜேசிங்க என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி ஆபத்தான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் திருமணம் செய்த இந்த தம்பதி புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் இரவு ஹபரன ஹோட்டலில் தங்கிய நிலையில் பிற்பகல் திருகோணமலை நோக்கி பயணித்துள்ளனர்.
இதன் போது தவறான வீதியில் பயணித்த பேருந்து ஒன்றுடன் இந்த தம்பதியின் மோட்டார் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தையடுத்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.





தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
