அச்சுவேலி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதைக்கான வளைவு
அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதைக்கான வளைவு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவனால் இன்று (05.11.2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் நீண்ட காலமாக பாதையின் வளைவு இல்லாத காரணத்தினால் அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் பழைய மாணவர்களால் குறித்த வளைவு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு
குறித்த வளைவினை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்,
“நாட்டில் தற்போது ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமானது பலருக்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளது. போதையின் பிடியிலிருந்து நாட்டிலுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும்.

எவ்வாறாயினும் அனைத்து சவால்களையும் கடந்து நாட்டினை வளமுள்ள சிறந்த பிரஜைகள் உள்ள நாடாக மாற்ற முன்வரவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணந்து செயற்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam