நியூஸிலாந்து மண்ணில் முதல் தோல்வியை சந்தித்த இலங்கை அணி
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணி, 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது
இதில், டெரில் மிட்செல் 62 ஓட்டங்களையும், மிச்செல் பிரேஸ்செல் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்
இலங்கை அணி
இலங்கை அணியின் பந்து வீச்சில் பினுர பெர்ணான்டோ, மதீஸ தீக்ஸன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, தமது 20 ஓவர்களில் 8 விக்;கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.
இதில், பத்தும் நிசங்க 90 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களையும் பெற்றனர் நியூஸிலாந்தின் பந்துவீச்சில், ஜேக்கப் டபி 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
