ஊவா மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான புதுவருட ஆரம்ப நிகழ்வு
2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஊவா மாகாண சபை வளாகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலிற்கு மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
"செயற்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு" என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மலரும் இப்புத்தாண்டில் மேலும் பல பாரிய வேலைத்திட்டங்கள் கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பேணி எமது செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.
அர்ப்பணிப்பு, வினைத்திறன் ஆகியவற்றைப் பேணி அரச சேவையை மக்கள் நலனுள்ளதாக மாற்றியமைக்க அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இதன்போது செயல்திறன் மிக்க அரச சேவைக்கான உறுதிமொழி வழங்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதான செயலாளர் பி.டீ. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன, மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட சக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri