கொழும்பு தாமரைக் கோபுரத்தில் தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட தமிழ் இசை நிகழ்ச்சி
லங்காசிறி, IBC தமிழ் மற்றும் சினிஉலகத்தின் டிஜிட்டல் ஊடக அனுசரணையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு Colombo Lotus Towerஇல் பிரம்மாண்ட தமிழ் இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளது.
பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடாத்திய Fivestar Creations நிறுவனம் எதிர்வரும் April 8ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள மற்றுமொரு பிரமாண்ட இசை, நடன, நகைச்சுவை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளது.
தென்னாசியாவின் உயரமான கோபுரமான கொழும்பில் அமைந்துள்ள தாமரைக் கோபுரத்தில் முதல் தடவையாக ஒரு தமிழ் இசை நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதர் சேனா, மானசி, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி புகழ் பாலா மற்றும் குழந்தை நட்சத்திரம் மேக்னா சுமேஷ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்ச்சி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழமைபோல் அல்லாமல் பார்வையாளர்களின் அருகிலேயே நெருங்கி பாடல்களை பாடும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை இந்நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்ச்சிக்காக 10,000 ரூபா, 7500 ரூபா, 5000 ரூபா, 4000 ரூபா மற்றும் 3000 ரூபாவிற்கு டிக்கட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கட்டுகளை www.bookmyshow.com எனும் இணையத்தளம் ஊடாகவும், 0777 21 91 31 எனும் இலக்கத்திற்கு அழைத்து நேரடியாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், வெள்ளவத்தையில் Rio, Wellawatthe Pharmacy, Shanmugas, Little Asia Emporium, பம்பலபிட்டியில் Amirtha, செட்டியார் தெருவில் Devi Jewellers, மெயின் வீதியில் Saradas, கொட்டாஞ்சேனையில் ZuZi, மட்டக்குளியில் Sathies Jewellery மற்றும் வத்தளையில் Health and Glow Pharmacy ஆகிய இடங்களில் டிக்கட்டுகளை நேரடியாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இந்நிகழ்ச்சி மாலை 6.30க்கு ஆரம்பித்து இரவு 10.30 மணிவரை இடம்பெறவுள்ளது. வாகனங்களில் வருபவர்களுக்கான Parking வசதியும், பொதுப் போக்குவரத்தில் வருபவர்கள் வீடு திரும்புவதற்கான விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தனை சிறப்புமிக்க New Year Mega Musical Night நிகழ்ச்சியில் முதற்தர தமிழ் இணையத்தளங்களான Lankasri, IBC தமிழ், தமிழ்வின் மற்றும் Cineulagam ஆகியன உத்தியோகபூர்வ Digital ஊடக பங்காளர்களாக கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
New Year Mega Musical Night நிகழ்ச்சி பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள https://web.facebook.com/fivestarcreations.srilanka பக்கத்தை பின்தொடரலாம்.



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
