நாடு தமிழர்களுடையது!நிரூபிக்க வெளிநாட்டு ஆய்வாளர்கள் தேவை-செய்திகளின் தொகுப்பு
அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய தொல்பொருள் ஆய்வாளர்களை நாட்டிற்கு அழைத்தால் இந்த நாடுமுழுவதும் தமிழர்களுடையது என்பதை நிரூபிக்கமுடியும் என்று தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட சிங்களவர்களால் கொண்டுவரப்படும் அனைத்துமே தமிழர்களிற்கு எதிரானதுதான்.
2009 இல் தமிழர்கள் அழியும்போதும் காணாமல் ஆக்கப்படும்போதும் சிங்கள மக்கள் மௌனமாக இருந்தார்கள்.அதனை ஆதரித்தார்கள். தற்போது இந்துகோவில்கள் தாக்கப்படும்போதும் அவர்கள் மௌனமாகவே இருக்கின்றனர். இதுவே இந்த நாட்டின் நிலைக்கு காரணம்.



