இன்ஸ்டாகிராமில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியில் பகிரப்படும் தவறான செய்திகளை ப்லர் (Blur) செய்யும் செயன்முறையை நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளதாக மெட்டா (Meta) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களின் நலன்கருதியே இந்த புதிய செயன்முறையை கொண்டு வரவுள்ளதாக இன்று (11.04.2024) மெட்டா அறிவித்துள்ளது.
சமீப காலமாக அதிகரித்து வரும் சமூக வலைதள பயன்பாட்டினால் இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகள் தூண்டிவிடப்படுவதாக அமெரிக்கா (United States) மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
புதிய செயலி
இந்நிலையிலேயே, இன்ஸ்டாகிராமில் நேரடியாக அனுப்பப்படும் செய்திகளை விசேட பாதுகாப்பு செயன்முறை ஒன்றின் மூலம் பகுப்பாய்வு செய்து (Scan) ஆபாசமான புகைப்படங்களோ காணொளிகளோ இல்லை என்பதை உறுதி செய்து பின்னரே அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்க முடியாத ஆபாசமான செய்திகளாக இருப்பின் செயலியானது தன்னிச்சையாக செயற்பட்டு அவற்றினை ப்லர் செய்யும் அல்லது தடுக்கும்.
இதன்மூலம் சமூக இன்ஸ்டாகிராம் செயலியினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகளை தடுக்க முடியும் என மெட்டா குறிப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |