இலங்கை வரும் இந்தியர்களுக்கு புதிய விசா நடைமுறை
இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு உள்வருகை விசாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்து, விஸாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட நிலையில், சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகைத் தந்ததன் பின்னர் உள் வருகை விஸாவை (ON ARRIVAL VISA) பெற்றுக்கொள்ளும் நடைமுறை இதற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் தலைவர் கிமாலி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri