இலட்சக்கணக்கான வாகன இலக்கத்தகடுகள் வழங்காததால் ஏற்பட்டுள்ள சிக்கல்
மோட்டார் சைக்கிள்கள் உட்பட புதிதாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இன்னும் இலக்கத்தகடுகள் வழங்கப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலமாக இலக்கத் தகடுகளை வழங்கி வந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஏப்ரல் 30, 2024 அன்று முடிவடைந்ததையடுத்து பொருத்தமான சேவை வழங்குநர் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மூன்று மாதங்களில் தீர்வு
இருப்பினும், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை வழங்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை ஒப்புதலுடன் ஒரு புதிய வழங்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்திடப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்திற்குள் இலக்கத்தகடுகளை வழங்க முடியும்.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 2,54,817 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 68,047 மோட்டார் கார்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மட்டும் 17,332 முச்சக்கர வண்டிகள், 6,936 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், 2,642 கெப் வண்டிகள், 2,096 பஸ்கள் மற்றும் 6,027 ஏனைய வாகனங்கள் என மொத்தம் 3,62,100 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சோழனை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய நிலா.. காதல் மலர்ந்ததா? அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam