சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் தொடர்பில் நீதியமைச்சரின் பரபரப்பான அறிவிப்பு
சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவுவது என்பது அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.
இந்த அலுவலகம் அவசரப்பட்டு செய்யக்கூடிய ஒன்றல்ல, சட்ட விதிகளின்படி அதற்கான கருத்துருவை தயாரிப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இந்த செயல்முறைக்கு சிறுது காலம் எடுத்தாலும், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டபடி பணியை விரைவில் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த விடயம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அந்தக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் பணிகள் தொடர்கின்றன. நீங்கள் நினைப்பது போல் இது 5 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒன்றல்ல.200 ஆண்டுகள் பழமையான முழு சட்டப் பிரிவுகளும் சட்டமா அதிபர் துறையுடன் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
மேலும் "கருத்துருவு" முறையாகத் தயாரிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நேரத்தில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. குழு மீண்டும் கூட வேண்டும்.இது விரைவாக செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அட அஜித்தின் சிட்டிசன் பட நடிகை வசுந்தராவா இது?... அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam