கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அரசு கடும் எச்சரிக்கை
வற் வரி திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, வரித் திருத்தம் தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் அரசாங்கத்துடன் உண்மையாக உழைக்க வேண்டும். அரசாங்கம் மக்களுடன் உண்மையாக உழைக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமான விடயமாகும்.
கடுமையான நடவடிக்கை
அரசியல் பேதங்களை தாண்டி, நாட்டை முன்னேற்றும் வகையில் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்த பயணமாகும்.
தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். வற் என்ற போர்வையில் வேலை செய்பவர்கள் சில நேரங்களில் இல்லாத அரக்கனை உருவாக்கி மக்களை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான முடிவெடுத்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.