புதிதாக கொள்வனவு செய்த வாகனம் - மூன்று நாளில் பற்றி எரிந்தமையால் அதிர்ச்சியில் உரிமையாளர்
களுத்துறை பிரதேசத்தில் புதிய வாகனம் ஒன்று முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார்.
சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் கலப்புகம பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவராவார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வேனை இயக்க முற்பட்டபோது இயங்காமல் போயுள்ளது.
தீப்பற்றி எரிந்த வாகனம்
அதனைத் தள்ளிக்கொண்டிருந்த போது தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு வாகனம் என்பன வந்து தீயைக் கட்டுப்படுத்திய போதிலும், அதற்குள் வேன் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
சாரதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.