தமிழ் மொழி கற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்
இலங்கைக்காக புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் தமிழ் மற்றும் சிங்கள மொழி கற்கும் புகைப்படங்கள் சிலவற்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிறிய பதிவொன்றை பதிவிட்டவர், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வது தகவல் தொடர்புக்கு மாத்திரமல்ல நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கற்பதற்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எனது உச்சரிப்பு சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்!” என மூன்று மொழிகளிலம் அவர் பதிவிட்டுள்ளார். இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி ஜே.சன்ங் பதவியேற்பதற்காக கடந்த 18ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தந்தார்.
இலங்கையில் இருந்து திரும்பிய பின்னர், அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இலங்கையர்களுக்கு உரையாற்றும் வகையில் விசேட குறிப்பொன்றையும் பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
I love learning new languages – learning Sinhala & Tamil won’t just help me communicate, it will also teach me so much about ?? history & culture.
— Ambassador Julie Chung (@USAmbSL) February 21, 2022
මම හිතනවා මගේ උච්චාරණය හරි යයි කියලා!
எனது உச்சரிப்பு சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்!
I hope my pronunciation will become ok! pic.twitter.com/plsAJwevZO