செம்மணி விவகாரத்தில் புதிய திருப்பம் - மரணதண்டனை கைதியின் பகிரங்க வாக்குமூலம்!
மண் காக்கும் போராட்டத்தில், காரணமே இன்றி மாண்டோரின் நீதிக்கான உயிருள்ள சாட்சியமாய் மாறி நிற்கின்றது செம்மணி.
இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான நீண்ட போரின் விளைவாக ஆட்கள் காணாமல் போன சம்பவங்களும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளும் பெருமளவில் இடம்பெற்றன.
அந்த கொடூர சம்பவங்களின் அடையாள பூர்வமான சான்றாக செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விளங்குகின்றன.
செம்மணி புதைகுழிகள் தொடர்பில், சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால், அதில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, மரணதண்டனைக் கைதியான இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது மனைவி மூலம், ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன், போர்க்குற்றங்கள், படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கையின் உயர்மட்டப் படை அதிகாரிகளின் விபரங்களையும் அவர் வெளிப்படுத்துவார் என்றும் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri