சோமரத்னவின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்! கிருஷாந்தி படுகொலை வழக்கில் சிக்கல்
கிருஷாந்தி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், படுகொலை தொடர்பில் விசாரணை நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சோமரத்ன ராஜபக்ச சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைத்து சாடசியமளிக்க தயார் என அவரது மனைவி கூறியுள்ளார்.
இவ்வாறிருக்க, சோமரத்ன ராஜபக்ச சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைத்து சாட்சியமளிக்க தயார் என அவரது மனைவி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
உள்ளக நீதி கட்டமைப்பு
இந்நிலையில், இலங்கை இராணுவத்தினர் குற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு உள்ளக நீதிகட்டமைப்பின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணைக்கு செல்ல முன்னர் உள்ளக நீதி கட்டமைப்பின் மூலம் விசாரணை நடத்துவது சிறந்தது என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அனுப்பி வைத்துள்ள கடிதம் குறித்து இலங்கை ஜனாதிபதி எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
