கொழும்பில் இன்று நடைமுறைக்கு வரும் புதிய போக்குவரத்து நெறிமுறை
கொழும்பில் இன்று சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அத்துலதஸ்ஸனாராம விகாரையின் வருடாந்த பெரஹர காரணமாக சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவுள்ளது.
விகாரையின் வருடாந்திர பெரஹர இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரஹர பௌத்தாலோக மாவத்தை, கனத்த சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி பொரளை சந்தி, மருதானை வீதி பேஸ்லைன் குறுக்கு வீதி, லெஸ்லி ரணகல சந்தி ஆகிய இடங்களில் திரும்பி, அதே பாதையில் ஆலயத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மாற்றுப்பாதையை பயன்படுத்தும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அசௌகரியத்தை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.




