இலங்கை பேராசிரியர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம்: 179 மில்லியன் டொலர்களுக்கு வாங்கிய ஃபைசர் நிறுவனம்
இலங்கையின் விஞ்ஞானி ஒருவர் உருவாக்கிய இருமல் மூலம் கோவிட் நோயாளிகளை அடையாளம் காணக் கூடிய செல்போன் செயலி தொழில்நுட்பத்தை உலகில் முன்னணி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனமான ஃபைசர் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.
இருமல் சத்தத்தை வைத்து கோவிட் தொற்றை கண்டறியலாம்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான உதந்த அபேரத்ன உருவாக்கியுள்ள இந்த செயலியை ஃபைசர் நிறுவனம் 179 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது.
இந்த செயலியை உருவாக்க பில் மற்றும் மெலிண்டா கோடிஸ் நிதியம் தனக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கியதாக பேராசிரியர் உதந்த அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை பயன்படுத்தி ஒருவரது இருமல் சத்தத்திற்கு அமைய அவருக்கு கோவிட் 19 தொற்றி இருக்கின்றதா என்பதை கண்டறிய முடியும்.
புதிய செயலியை கொண்டு பல சுவாச நோய்களை கண்டறிய முடியும்

ரொப்பீட் என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர். பரிசோதனைகளுக்கு பதிலாக இந்த புதிய செயலியை பயன்படுத்தி கோவிட் தொற்றாளர்களை மாத்திரமல்லாது பல்வேறு சுவாச நோய்கனை அடையாளம் காண முடியும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
குறிப்பாக விமான நிலையங்கள், விளையாட்டு இடங்கள் அல்லது முதியோர் இல்லங்களில் தொற்றாளர்களை துரிதமாக அடையாளம் காண இந்த புதிய செயலியை பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri