மரணிப்போரின் வீதத்தை குறைக்கும் ஃபைசர் நிறுவனத்தின் புதிய கோவிட் மருந்து
அமெரிக்காவின் ஃபைசர் (Pfizer) நிறுவனம் கோவிட் நோய் தொற்றுக்கு எதிராக தயாரித்துள்ள கேப்சூல் மருந்து மூலம் வயதானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது மற்றும் மரணங்கள் என்பன 89 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பேக்ஸ்லோவிட் என்ற இந்த கேப்சூல் மருந்தின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளதாக Pfizer நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த மருந்திற்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
ஆனால், பிரித்தானியா ஏற்கனவே 2 லட்சத்து 50 ஆயிரம் கேப்சூல்களை கொள்வனவு செய்வதற்கான விண்ணப்பத்தை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
