அதிக வருமானம் உள்ளவர்களுக்கு ஏன் வரி விதிக்கப்பட்டது..! நிதி இராஜாங்க அமைச்சரின் தகவல்
அதிக வருமானம் உள்ளவர்களுக்கு ஏன் வரி விதிக்கப்பட்டது என்பது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானியங்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காகவே அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30.01.2023) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்களை பாதித்துள்ள புதிய வரிகள்
மேலும் தெரிவிக்கையில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வரிகள் பொருந்தும். புதிய வரிகள் மக்களைப் பாதித்துள்ளதை நாங்கள் அறிகிறோம்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவே வரிகளை உயர்த்தியுள்ளோம். அத்தோடு கடன் வழங்குனர் மற்றும் சர்வதேச நாணய நிதியமும் இதனை பரிந்துரைத்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானியங்கள், உதவிகளை வழங்குவதற்காக அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் நாட்டின் நிலைமை சீரடையும் போது, வரி விகிதங்களை மீள்பரிசீலனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.