பல நாடுகளுக்கு புதிய வரி: ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சுமார் 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த நாடுகளின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (8) வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஓகஸ்ட் (1) ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரக்கூடும் என்றும், சில நாடுகளுக்கு இது 70 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
புதிய வரி
அத்தோடு, இந்த 12 நாடுகளில் இந்தியாவும் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே ட்ரம்ப் எதிர்வரும் (9) ஆம் திகதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மறுபுறம், அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சென்ற உயர்மட்ட இந்தியக் குழு பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளது.
வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா கோரும் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தை அணுகல் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
எனவே ஜூலை 9 ஆம் திகதிக்குள் வரி விலக்கு பெற இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நிமிட அரசியல் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் எந்த காலக்கெடுவின் கீழும் எந்த வர்த்தக ஒப்பந்தங்களும் இருக்காது என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
