இலங்கையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் தொடர்பில் புதிய நடைமுறை
இலங்கையில் 5000 ரூபாவிற்கும் குறைவான LankaQR மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு எவ்வித மேலதிக கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
5000 ரூபாவிற்கு குறைவான தொகையை QR குறியீடு ஊடாக அனுப்பும் நபரிடமிருந்தோ அல்லது அதனைப் பெறுபவரிடமிருந்தோ எந்தவொரு மேலதிகக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
கைபேசி செயலிகள்
சமகாலத்தில் இருபதிற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் முப்பதிற்கும் மேற்பட்ட கைபேசி செயலிகள் மூலம் LankaQR பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் அதன் பயன்பாடு மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
QR பணப்பரிமாற்றங்கள்
கடந்தாண்டின் மூன்றாம் காலாண்டில், LankaQR ஊடாக சுமார் 1.18 பில்லியன் ரூபா பெறுமதியான 274,000 பரிமாற்றங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இது மாதத்திற்குச் சராசரியாக 90,000 பரிமாற்றங்கள் மட்டுமேயாகும்.
பெரும்பாலான QR பணப்பரிமாற்றங்கள் 5,000 ரூபாவிற்கும் குறைவாகவே காணப்படுவதால், இந்த புதிய சலுகை மூலம் மக்கள் பணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam