தினேஷ் ஷாப்டரின் மரணம்: விசாரணையில் புதிய திருப்பம்
தினேஷ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச் செயல் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கொலையாளிகளை கண்டறிய கொலை மற்றும் கொள்ளை விசாரணைப் பிரிவு விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.
கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக அல்லது அவரது சொத்தை பெறும் நோக்குடன் அவருக்கு நெருக்கமான ஒருவர் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற பல கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைப் பிரிவு
சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல கோடி ரூபாய்க்கான ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, ஷாப்டரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தக் கொலையைச் செய்தாரா என, விசாரணை அதிகாரிகள் தற்போது சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, ஷாப்டருக்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவிட்டார்.

ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் குழுவின் உறுப்பினர்கள், இது தொடர்பான அறிக்கை குறித்து கொலை மற்றும் கொள்ளை விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
you may like this,
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri