தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
மல்லாவி நகரில் நேற்று (17.09.2024) மாலை ஒன்றுகூடிய முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளை முக்கியஸ்தர்கள் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் கட்சிக்குள் நிலவி வருகின்றது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எனினும், தமிழரசுக் கட்சியின் இறுதி முடிவாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளை முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்டவர்கள் கலந்துரையாடி தமிழ்ப் பொது வேட்ப்பாளரை ஆதரித்துள்ளனர்.
அத்துடன், மக்கள்
அனைவரையும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேந்திரனின் சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசமாய் திரள்வோம்: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் பகிரங்க அழைப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
