மொட்டுக்கட்சியின் புதிய வியூகம்: திரட்டப்படும் ஆதரவாளர்கள்
கிராம மட்டத்தில் சிதறியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தரப்பினர்களை ஒன்றிணைக்கும் விசேட செயற்திட்டம் இடம்பெற்று வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (23) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கூட்டணி அமைப்பது குறித்து கட்சித் தலைவர்கள் விவாதிப்பார்கள் என்றும் திஸ்ஸ குட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
பழிவாங்கல் செயற்பாடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பழிவாங்கபடுவதாகவும், நாமல் ராஜபக்சவால் மட்டுமே மொட்டுக்கட்சி விட்ட இடத்திலிருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பழிவாங்குவதன் இறுதி விளைவு, தவிர்க்க முடியாத நிறைவேற்று ஜனாதிபதியாக அவர் பதவியேற்பதே என்றும் குட்டியாராச்சி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |