கட்டுப்படுத்துவதில் சிரமமான கோவிட் புதிய திரிபு - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
கோவிட் திரிபுகளில் கட்டுப்படுத்த சிரமமான புதிய வைரஸ் திரிபு சம்பந்தமாக உலக சுகாதார துறையினர் கூடிய கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
ஜப்பானில் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் திரிபு R.1 என பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த புதிய வைரஸ் திரிபு தொற்றுக்கு உள்ளான 45 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் திரிபானது பரவுதல், பெருகுதல், நோய் எதிர்ப்பு சக்தியை மீறி செல்வது வெளிப்படையாக தெரியும் மாறுபாடு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையில் குறித்த வைரஸ் திரிபு தொடர்பில் கூடிய கவனத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.