தென் மாகாண புதிய ஆளுநர் சுசிரிபால ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை நியமித்துள்ளார்.
அதன்படி, அரசமைப்பின் 154 ஆ பிரிவின்படி, 2026 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பங்கேற்பு
இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றிய சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் நேற்று(24.02.206) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

