உள்ளூராட்சித் தேர்தல்: புதிய திட்டத்திற்கு தயாராகும் பொலிஸார்
உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன், புதிய மற்றும் விரிவான பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
விசேட பாதுகாப்பு
இந்த பாதுகாப்புத் திட்டத்தில், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், அரச புலனாய்வு அமைப்புகள் மற்றும் சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, நடமாடும் ரோந்துகள் மற்றும் பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் பிரிவும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கொலன்னாவை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலையைத் தொடர்ந்து, சில நபர்களின் தொடர்புகளின் அடிப்படையில், பாதாள உலகக் குற்றங்கள் நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
