அடுத்த மாதம் வியட்நாம் பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாத ஆரம்பத்தில், வியட்நாமுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு 20வது ஐக்கிய நாடுகளின் வெசாக் தினத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் வெசாக் தினத்திற்கான முக்கிய கருப்பொருள் "மனித கண்ணியத்திற்கான ஒற்றுமை மற்றும் உள்ளடக்கம்: உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு" என்பதாகும்.
இந்த வெசாக் கொண்டாட்டங்கள் மே 6 முதல் 8 வரை ஹோ சி மின் நகரில் நடைபெறும்.
நிலையான வளர்ச்சி
இதில், 85 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1,250 சர்வதேச விருந்தினர்கள் உட்பட சுமார் 2,700 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைத் தவிர, இந்தியா, நேபாளம், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்தும் உயர்மட்ட பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகா போதி சங்கத்தின் பாதுகாப்பில் உள்ள இந்த நினைவுச்சின்னங்கள் முதன்முறையாக வியட்நாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு வாரத்திற்கு நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினத்தை முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 1999இல் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
