காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய முயற்சி
மலேசியாவின் MH370 விமானம் காணாமல் சென்று 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதனை மீண்டும் தேடுவதற்கு மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனாவின் பெய்ஜிங் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் காணாமல் போனது.
இது விமானப் போக்குவரத்து வரலாற்றில் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத மிகப்பெரிய மர்மமாக உள்ளது.
நிபந்தனை
இந்த விமானத்தின் இடிபாடுகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக தோல்வியடைந்த நிலையில், விமானத்தில் பயணித்தவர்களின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இன்னும் விடைதெரியாத நிலையில் உள்ளனர்.
மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன் இன்பினிட்டி(Ocean Infinity) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளார்.
70 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில், மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை, விமானத்தை கண்டுபிடிக்காவிட்டால் பணத்தை செலுத்த தேவையில்லை என்ற நிபந்தனையின் அடிப்படையில் செயற்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |