இந்தியாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: 11 பேர் பலி
இந்தியா (India) - ஜெய்ப்பூரில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெய்ப்பூரில் உள்ள அஜ்மீர் சாலையில் குறித்த தீ விபத்து, இன்று (20) ஏற்பட்டுள்ளது.
காலை 5.30 மணி அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, எரிபொருள் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று, சிஎன்ஜி தாங்கி வாகனங்கள் மீது மோதியதில் தீப்பிடித்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகள்
இதன்போது, எரிபொருள் தாங்கிகள் மேலும் வெடிப்புக்குள்ளானதால் தீ பாரியளவில் பற்றியுள்ளது. இந்நிலையில், குறித்த விபத்தின் போது எழுந்த சத்தமானது, சுமார் 10 கிலோமீற்றர் தூரம் வரை கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தீயை அணைத்து காயமடைந்தவர்களை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 28 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சம்பத்தில் மோதிய லொறியில் ஆபத்தான இரசாயனம் இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
