சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்கும் புதிய திட்டம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்குச் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் நேற்று (16) நாவலையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை கூடம்
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தலைமையில், இந்தத் திட்டத்துக்கான டிக்கெட் விற்பனை கூடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்தச் சலுகை விலை விமான டிக்கெட்டுகளை வெளிநாட்டு வேலைக்காகச் செல்லும் அனைத்துப் புலம்பெயர் தொழிலாளர்களும், அவர்கள் செல்லும் நாடு எதுவாக இருந்தாலும், கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆரம்ப நிகழ்வில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பி.எஸ்.யாலகம, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
