இ.போ.ச பேருந்து முற்பதிவு - பணத்தினை மீளச்செலுத்தும் திட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lanka Thurairajah Raviharan
By Shan Aug 20, 2025 04:00 AM GMT
Report

இலங்கை போக்குவரத்துச் சபையினால் மாற்று வேலைத்திட்டம் எதுவுமின்றி 2025ஆம் ஆண்டில் நிகழ்நிலை ஆசன முன்பதிவு வசதிகளைக் கொண்ட பேருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பிலும், அவ்வாறு இரத்துச் செய்யப்பட்ட பயணத் தடவைகளுக்காக பணம் அறவிடப்பட்டு மீளச்செலுத்துவதில் தாமதம் ஏற்படுகின்றமை தொடர்பிலும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இதுவரை 11 இலட்சத்து 96 ஆயிரத்து 46 ரூபாய் இரத்துச் செய்யப்பட்ட பயணத் தடவைகளுக்காக அறவிடப்பட்டு இதுவரையில் மீளச் செலுத்தப்படாமலுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

அத்தோடு தொடர்புடைய காசட்டைக்கு பணத்தை மீள வழங்குவதற்கு மக்கள் வங்கியுடன் தேவையான தொழிநுட்ப ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச்சபை தொடங்கியுள்ளதாகவும், நிகழ்நிலை வழியிலான ஆசன ஒதுக்கீட்டுக் கொள்கையை மீளாய்வு செய்து இரத்துச்செய்யப்பட்ட பயணங்களுக்கான பணத்தினை மீளச்செலுத்துவதில் உள்ள தாமதத்தை தீர்க்கும் வகையில் புதிய திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிடம் கேள்வி எழுப்பிய நிலையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி

இலங்கை போக்குவரத்துச் சபையினால் மாற்று வேலைத்திட்டம் எதுவுமின்றி 2025ஆம் ஆண்டில் நிகழ்நிலை ஆசன முன்பதிவு வசதிகளைக்கொண்ட பேருந்துச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கேள்வி எழுப்பப்பட்டது.

இ.போ.ச பேருந்து முற்பதிவு - பணத்தினை மீளச்செலுத்தும் திட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | New Scheme Refunding Money Delay Bus Pre Bookings

அவ்வாறு இரத்துச் செய்யப்பட்ட பயணத் தடவைகளுக்காக அறவிடப்பட்டு இதுவரையில் மீளச் செலுத்தப்படாத பணத்தொகை தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டதுடன், பயணத் தடைகள் இரத்துச் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்கும், அதற்குரிய பணத்தை தாமதமின்றி மீளச் செலுத்துவதற்கும் ஏதேனும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

பயணிகளின் நன்மை கருதி வெளிப்படைத்தன்மையுடன் கூடியதாக இந்த நடவடிக்கை இடம்பெறுகின்றது என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்நிலை வழியிலான ஆசன ஒதுக்கீட்டுக் கொள்கையை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டது.

பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பதில்

இந்நிலையில் இதன்போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பதிலளிக்கையில், 2025ஆம் ஆண்டில் 4,928 முன்பதிவுசெய்யப்பட்ட பயணங்கள் இதுவரை இரத்துச்செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 2541 பயணங்களுக்கு மாற்று பேருந்துகள் வழங்கப்பட்டதோடு 1505 பயணங்களுக்கு பயனாளிகளுக்கு மாற்று திகதிகள், மாற்று பயண ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 4928 முன்பதிவு செய்யப்பட்ட பயணங்களில் இதுவரை 4046 பயணங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை இதுவரை 11 இலட்சத்து 96 ஆயிரத்து 46 ரூபாய் இரத்துச் செய்யப்பட்ட பயணத் தடவைகளுக்காக அறவிடப்பட்டு இதுவரையில் மீளச் செலுத்தப்படாமல் காணப்படுகின்றது.

இ.போ.ச பேருந்து முற்பதிவு - பணத்தினை மீளச்செலுத்தும் திட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | New Scheme Refunding Money Delay Bus Pre Bookings

அத்தோடு பயணம் ஒன்று இரத்துச்செய்யப்படும் போது, மாற்று பேருந்து ஒன்றை வழங்குவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். மற்றொரு பேருந்தை வழங்க இயலாத நிலையில், முன்பதிவு செய்த பயணிகள் அனைவருக்கும் குறுஞ்செய்தி ஊடாக அறிவுறுத்தப்படுவதோடு மற்றொரு பேருந்தில் அதே நாளிலோ மற்றொரு நாளிலோ அவர்கள் பயணம் செய்வதற்கேற்ற வசதிகள் வழங்கப்படும். மேற்படி இரண்டு முறைகளையும் பயணிகள் தெரிவு செய்ய விரும்பாத நிலையில், அவர்கள் செலுத்திய பணம் மீள வழங்கப்படும்.

பணம் மீள செலுத்தப்படும் முறையில், சம்பந்தப்பட்ட பயணியின் கணக்கு விபரங்களை சரிபார்ப்பதற்கு பல நாட்கள் எடுக்கும். பின்னர் பயணியின் சொந்தக்கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும். தற்போது, பேருந்தின் பயணத்திட்டம், புறப்படும் நேரம், பேருந்து நடத்துநரைத் தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், ஏதேனும் ஒரு காரணத்துக்காக பேருந்து பயணம் செயற்படுத்தப்படாவிடின், திட்டமிட்ட பேருந்துக்கு பதிலாக வேறு பேருந்தை செயற்படுத்தப்படின் அவை தொடர்பாக பயணிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாகவும் 1315 எனும் குறுந்தொலைபேசி சேவை ஊடாகவும் அறிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, இரத்துச்செய்யப்பட்ட பயணங்களுக்கான பணத்தினை மீளச்செலுத்துவதில் உள்ள தாமதத்தை தீர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தொடர்புடைய காசட்டைக்கு பணத்தை மீள வழங்குவதற்கு மக்கள் வங்கியுடன் தேவையான தொழினுட்ப ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச் சபை தொடங்கியுள்ளது.

நிகழ்நிலையில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது, பயணச்சிட்டைக்கான பணம் நேரடியாக இலங்கை போக்குவரத்துச் சபையின் மக்கள் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுவதோடு மீள்செலுத்துதலும் அதே கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும். இப்படியான முறைமை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

ஆசன ஒதுக்கீட்டுக் கொள்கை மீளாய்வு

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நிகழ்நிலை வழியிலான ஆசன ஒதுக்கீட்டுக் கொள்கையை மீளாய்வு செய்து இரத்துச்செய்யப்பட்ட பயணங்களுக்கான பணத்தினை மீளச்செலுத்துவதில் உள்ள தாமதத்தை தீர்க்கும் வகையில் புதியதிட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்துவதை வரவேற்கின்றேன். ஏற்கனவே இத்தகைய தவறுகளை இருப்பதால் அவற்றினைச் சீர்செய்ய வேண்டும் என்பதற்காகவே தங்களிடம் கேள்வி எழுப்ப வேண்டியிருந்தது.

அதேவேளை நிகழ்நிலைவழியிலான ஆசனப் பதிவு பேருந்துகள் சேவைகளை வழங்கமுடியாத நிலையிலிருப்பின், ஆசனப்பதிவுசெய்த பயணிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கப்படுவதில்லை. தாமதமாகியே பயணிகளுக்கு தகவல்கள் வழங்கப்படுகின்றன. இதனால் ஆசனப் பதிவை மேற்கொண்டுவிட்டு பேருந்தை எதிர்பார்த்திருக்கும் பயணிகள் தாமதித்த திடீர் அறிவிப்புக்களால் அவதியுறுகின்ற நிலையும் ஏற்படுகின்றது.

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் புதுக்குடியிருப்பிலிருந்து இரவு 08.30 மணிக்குப் புறப்படும் கொழும்பிற்கான பேருந்து முல்லைத்தீவிற்கு இரவு 9 மணிக்கு வந்தடைகின்றது. ஆனால் குறித்த பேருந்தினால் சேவைகளை வழங்கமுடியாத சந்தர்ப்பங்களில் இரவு 08.55 மணியளவிலையே குறித்த பேருந்தில் ஆசனம் பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து சேவை இடம்பெறாதென்ற தாமதித்த அறிவித்தல் திடீரென வழங்கப்படுகின்றது. இதனால் பயணிகள் அவதியுறுகின்றனர்.

பயணிகள் உரிய நேரத்தில் உரிய இடங்களுக்குச் சென்று சேரமுயாத நிலை ஏற்படுகின்றது. ஆகவே இந்தவிடயத்தில் கவனமெடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவினால் உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

நன்றி நவிலல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US