நானுஓயாவில் தொடருந்து ஆசன முன்பதிவில் சிக்கல்
கொழும்பு மற்றும் பதுளை இடையே செல்லும் எல்ல ஒடிசி தொடருந்தில் சுற்றுலா பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடு செய்யாது ஆசன முன்பதிவு செய்தமையால் சுற்றுலா பயணிகளை தொடருந்தில் பயணிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வெற்று ஆசனங்களுடன் தெடருந்து சென்றதாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நானுஓயாவிலிருந்து எல்ல நோக்கி செல்லும் பயணிகள் இன்றையதினம் (11) பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதோடு தொடருந்து நிலையத்தில் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளுடன் முரண்பட்ட பின்னர் அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு
இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடருந்து டிக்கெட்டுகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடி நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவித்து தொடருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என இலங்கை தொடருந்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதன் காரணமாக குறித்த சிக்கல் எழுந்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
இதனால் இன்றைய தினம் எல்ல ஒடிசி தொடருந்தில் பயணிக்க முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமானவர்கள் நானுஓயா தொடருந்து நிலையத்தில் மீண்டும் சாதாரண பயணசீட்டை 300 ரூபாய்க்கு பெற்றுக்கொண்டு கண்டி முதல் எல்ல வரை செல்லும் போடி மெனிகே தொடருந்தில் எல்ல வரை தங்கள் பயணங்களை தொடர்ந்தனர்.
எவ்வாறெனினும் இவர்கள் இணையத்தளங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக நானுஓயாவிலிருந்து எல்ல நோக்கி பயணிப்பதற்கு ஆசனங்கள் சுமார் 6000 ரூபாய்க்கு அதிகமாக செலுத்தி முன்பதிவு செய்து அமர்ந்து கூட செல்ல முடியாத காரணத்தால் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதில் பாதுகாப்பற்ற வகையில் தொடருந்து மிதிபலகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நின்றவாறு பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
