இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்டம்
குற்றச் செயல்களின் உருவாக்கம் தொடர்பில் புதிய சட்டமூலம் ஒன்று எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட வருமானத்தை மீட்டு, அவற்றை அரசுடைமையாக்குவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் குற்றச் செயல்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மீட்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை பெறுவது தொடர்பான பல புதிய விதிகளும் இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.
குற்றச் செயல்
இந்தச் சட்டம், குற்றச் செயல்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தடை செய்ய உரிய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது.

புதிய சட்டமூலம் குற்றச் செயல்களின் வருமானத்தை நிர்வகிக்க ஒரு புதிய அதிகாரசபையை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லஞ்சம், ஊழல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நிதி குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளும் புதிய சட்டத்திற்கமைய, மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 52 நிமிடங்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan