கையடக்கத் தொலைபேசி பாவணை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா
பிரித்தானியாவில்(United Kingdom) 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்க வேண்டாம் எனத் தொடர்பாடல் ஒழுங்குமுறை ஆணையம் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, ஐந்து முதல் ஏழு வயது வரையிலான பிரித்தானியக் குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கினர் ஸ்மார்ட்போன்(SmartPhone) பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
பெற்றோர் கட்டுப்பாட்டு
இந்நிலையில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் அழைப்புகளைச் செய்வதற்கும் குறைந்த திறன் கொண்ட தொலைபேசிகளை மட்டுமே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மேலும், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் கூடிய தொலைபேசிகளை வழங்குவதற்கும், 13 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களில் கட்டுப்பாடுகளை வழங்குவதற்கும் இது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.