வடக்கு மற்றும் தமிழ்நாட்டு சுற்றுலாத் துறைகளை இணைப்பதற்கு புதிய திட்டம்
வட மாகாண சுற்றுலா துறையும் இந்திய தமிழ்நாட்டு சுற்றுலா துறையும் இணைப்பதற்கு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திட்டங்களை வகுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையதின் ஊடாக தமிழ்நாட்டையும் வடக்கு மாகாணத்தையும் இணைத்து குறித்த சுற்றுலாத்துறை இணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம்
இதன் மூலம் வடக்கில் இருந்து தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களை தரிசிக்கவும் தமிழ்நாட்டிலிருந்து வடக்கின் சுற்றுலா மையங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களின் சுற்றுலா மையங்களுக்கு இலகுவாக சென்று வருவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பேச்சு வார்த்தை
கடந்த வருட இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட வட மாகாண
ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் தமிழ்நாட்டின் துறை சார்ந்த அதிகாரிகள்
மற்றும் அரசியல்வாதிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
