இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
அனைத்து பிரஜைகளுக்கும் 30 மாதங்களுக்குள் டிஜிட்டல் பை (Digital wallet) அறிமுகப்படுத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டதன் பின்னர், அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் வலட் (டிஜிட்டல் பை) நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் பரீட்சைச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தங்கள் திறன்பேசியிலுள்ள டிஜிட்டல் வலட்டில் வைத்து எந்த நேரத்திலும் சமர்ப்பிக்க அனைத்து குடிமக்களுக்கும் அனுமதியளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா கியூஆர் குறியீடு செலுத்தும் திட்டம் நாட்டின் 13 முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,டிஜிட்டல் பை (Digital wallet) விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தற்போதைய ஆயுதம் என்ன? - இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri