கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு
கல்முனை நீதி பரிபாலனை சட்டத்தரணிகள் சங்கத்தின் (Bar Association) புதிய தலைவராக கல்முனையை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி யூ.எல். எம். நிசார் (சட்ட முதுமானி LL.M) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் கல்முனை உயர் நீதிமன்றம்,மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழ் முஸ்லிம் சட்டத்தரணிகள் கல்முனை நீதிமன்ற கட்டடத்தில் ஒன்று கூடி நடப்பு ஆண்டின் கல்முனை நீதி பரிபாலனை சட்டத்தரணிகள் சங்கத்தின் (Bar Association) புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சட்டத்தரணி நிசார் பொத்துவில்,அக்கரைபற்று,கல்முனை, வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கல்முனை உயர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் சிவில் மற்றும் நிதி வழக்குகளில் நீண்ட கால அனுபவம் கொண்டு பணி புரிந்து வருகின்றார்.
இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலம் தொட்டு இன்று வரையும் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராகவும் சட்டத்தரணி நிசார் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



