அநுரவிற்கு சுமந்திரனின் வாழ்த்து செய்தி! தமிழர்களுக்கு கூறியுள்ள தகவல்
ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நன்றி
நாட்டில் நடைபெற்று முடிந்த 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையிலுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக தேர்தல் பிரசார களத்தில் ஈடுபட்டவர்களும் தமது தரப்பினரின் தோல்வியை ஏற்றுக்கொண்டு அநுரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கமைய, எம்.ஏ.சுமந்திரன், இன அல்லது மத பேரினவாதத்தில் தங்கியிருக்காமல் வெற்றியை அடைந்ததற்காக திசாநாயக்கவை பாராட்டினார், இது அவரது பிரசாரத்தை வேறுபடுத்திய ஒரு முக்கிய காரணியாகும் என கூறியுள்ளார்.
அநுரவிற்கு வாழ்த்து
இன, மத வெறிக்கு இடமளிக்காமல் அபார வெற்றி பெற்றதற்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள்.

இதேவேளை 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அநுரகுமார புதிய ஜனாதிபதியாக வருவார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. ஜனநாயகம் மற்றும் நல்லெண்ண உணர்வுடன், நான் எனது நண்பரை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan