இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய நடைமுறை
இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் டொலரில் மட்டுமே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக அந்நிய செலாவணியை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு, நாட்டிலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட பயண முகவர் நிறுவனங்களுக்கும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் டொலர்களின் புழக்கத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் நாணயச் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
“வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம்” என்ற தொனிப்பொருளில் சேவைகளை வழங்கும் சுற்றுலா ஹோட்டல்களை எச்சரிக்க சுற்றுலா அமைச்சு மற்றும் நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளன.
சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவளிக்க மறுத்ததே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை நிராகரித்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் சேவை செய்யும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri