பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) புதிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்து 'பொதுஜன ஐக்கிய முன்னணி' (Podujana Eksath Peramuna) என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
இன்று (14) அமைக்கப்பட்ட புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவும், பொருளாளராக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாற்காலி சின்னம்
இந்த நிகழ்வின் போது, சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண மற்றும் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட 21 உறுப்பினர்களைக் கொண்ட தலைமைத்துவ சபையையும் உள்ளடக்கிய கூட்டணிக்கான பதவிகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த கூட்டணியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதேவேளை இந்தப் புதிய கூட்டணி எதிர்கால தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |