நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம் : செய்திகளின் தொகுப்பு
நாட்டு மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குருநாகல் - ஹிரியாகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், " சனசக்தி வறுமை ஒழிப்புத் திட்டத்தை விடவும் காத்திரமான வறுமை ஒழிப்புத் திட்டமொன்று இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்தின் ஊடாக வறிய மக்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
சா.தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மே மாதம் முதல் வழங்கப்படும் கொடுப்பனவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |