கனடாவில் அம்மன் ஆலயம் ஒன்று 10,000 டொலர் அபராதம்
கனடாவில் விதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆலயம் ஒன்றுக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிராம்ப்டன் நகரிலுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக வெளிநாட்டு ஊழியர் திட்டத்தின்' விதிகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபராதம் விதிப்பு
ஆய்வு நடவடிக்கையின் போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 28 அன்று எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம், அண்மையில் கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், குறித்த ஆலயத்தின் தகுதிநிலை தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் விவரங்கள் அரசினால் பகிரங்கப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.