பேருந்து கட்டண முறைகேடுகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்
வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் அறவிடப்பட்டால் முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.
பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை மட்டுமே அறவிடுமாறு இலங்கை போக்குவரத்துக் அமைச்சு மற்றும் தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக அறவிடப்பட்டால் , தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பிரதான அழைப்பு சேவை 1955 அல்லது வாட்ஸ்அப் எண் 0712595555 ஆகியவற்றுக்கு முறைபாடுகளை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பேருந்து கட்டண திருத்தம்
நேற்று (ஜூலை 4) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின்படி கட்டணமானது 0.55% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது சேவைகள், அரை சொகுசு சேவைகள், சொகுசு சேவைகள், அதி சொகுசு சேவைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் அனைத்து பேருந்து சேவைகளுக்கும் இந்தப் பேருந்து கட்டணக் குறைப்பு பொருந்தும் என்று தேசிய போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பேருந்து கட்டணம் அறவிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
