முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : தீர்வாக அமையவுள்ள கட்சி
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக எமது கட்சி அமையும் என புதிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் முஸம்மில் அபூசாலி குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று (13.03.2024) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“சமூகத்தில் பல்வேறு கட்சிகள் இன்று காணப்படுவதோடு ஒரு பலமான கட்சியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி காணப்பட்டது.
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
ஆனாலும், இன்று அந்தக் கட்சி தளம்பல் நிலையில் உள்ளது. தற்போதுள்ள எதிர்கால சந்ததியினர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நம்பக்கூடிய நிலையில் அதன் பயணங்கள் அமையவில்லை.
அந்த நிலைமை மாறி நாங்கள் எமது உரிமைகளையும் நம் சமூக கட்டமைப்புக்களையும் பாதுகாத்துக் கொள்ள எமது புதிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பமும் முடிவும் அமைந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |