இலங்கை - தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம் தமிழ்நாட்டில் அங்குரார்ப்பணம்!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டில் மலையக மக்களின் நலனுக்காக புதிய இயக்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
"இலங்கை - தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம்" என்ற பெயரில் நேற்றையதினம் (06.07.2023) குறித்த இயக்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - திருச்சியில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மனோ கணேசன் உள்ளிட்ட இலங்கை தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மலையக தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்,
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம், இலங்கையில் வாழும் இந்திய - தமிழக வம்சாவளி மலையக தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களது அபிலாஷைகள் தொடர்பில் தமிழகத்தில் புதிய ஒளி பாய்ச்சப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தாயகம் திரும்பியதாக சொல்லப்பட்டு தமிழகத்தில் வாழும் மக்களின் துன்பங்களையும் அறியக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் ஏறக்குறைய 15 இலட்சம் இந்திய - தமிழக வம்சாவளி மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அத்துடன், தாயகம் திரும்பியதாக சொல்லப்படுவோர் தமிழகத்தில் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள்.
மொத்தமாக, 40 இலட்சம் பேரும் இலங்கையில் குடியுரிமையுடன் வாழ்ந்திருக்க வேண்டும். ஆகவே இந்த ஒட்டு மொத்த 40 இலட்சம் தமிழர்கள் தொடர்பாக இலங்கை, இந்திய மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களுக்கு பெரும் தார்மீக பொறுப்பும், கடமையும் உள்ளன.
நல்வாழ்வு திட்டங்கள்
இந்த அரசாங்கங்கள், தமது தேசிய சொந்த நலன்களுக்காக இனியும் தங்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பயன்படுத்த இடமளிக்க முடியாது.
இந்த மூன்று அரசுகளும் முன்வந்து தங்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை அமைத்து தர வேண்டும். அதை நாம் இனி தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் வலியுறுத்தி தீர்வுகளை தேடி பெறுவோம் என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
* தலைவர் (இலங்கை) - மனோ கணேசன் (எம்.பி.)
* தலைவர் (தமிழகம்) - எம். எஸ் செல்வராஜ்
* துணைத் தலைவர்கள் - பி.டி. ஜோன், கே. ஏ. சுப்பிரமணியம், மிசா மாரிமுத்து
* செயலாளர் - சட்டத்தரணி தமிழகன்
* துணைச் செயலாளர்கள் - சட்டத்தரணி ஈசன், டார்வின் தாசன்
* செயற்குழு உறுப்பினர்கள் - திருமதி செல்வராணி, திருமதி கலா
* ஆலோசகர் குழு உறுப்பினர்கள் - முனைவர் ஸ்டீபன் ஆன்டணி, பிஜோய், சிவஞானம், டி. எஸ். எஸ். மணி, அஜித் மேனன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
