இலங்கையில் கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு.....
இலங்கையில் புதிய கையடக்கத் தொலைபேசிகள் கொள்வனவு 80 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்தார்.
கையடக்க தொலைபேசி
அத்துடன், பழைய கையடக்கத் தொலைபேசிகளின் பழுது நடவடிக்கை 118 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளின் பின்னணியில் கையடக்கத் தொலைபேசி துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தவிர்க்கும் மக்கள்
சாதாரண கையடக்க தொலைபேசிகளும் பெருந்தொகையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால், அதனை கொள்வனவு செய்வதை மக்கள் தகவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.