மின்சாரத் தயாரிப்பில் புதிய மைல்கல்
உலகளாவிய மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் தூய எரிசக்தி ஆதாரங்கள் முதன்முறையாகப் புதைபடிவ எரிபொருட்களை (Fossil Fuels) முந்தியுள்ளதாக 'எம்பர்' (Ember) எனும் எரிசக்தி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் மின்சாரத் தேவையைச் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவையே முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளன.
இதன்மூலம் நிலக்கரி மற்றும் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை இனிவரும் ஆண்டுகளில் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்
கடந்த ஆண்டில் உலகின் மொத்த மின் நுகர்வில் 42.6 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தி போன்ற குறைந்த உமிழ்வு ஆதாரங்களே வழங்கியுள்ளன.
இந்த மாற்றம் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகக் கருதப்பட்டாலும், மின்சார விநியோகத்தின் ஸ்திரத்தன்மை குறித்துச் சில நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கடும் குளிர் அல்லது வெப்பம் நிலவும் காலங்களில் ஏற்படும் உச்சக்கட்டத் தேவையைச் சமாளிக்க இப்போதும் நிலக்கரி மற்றும் எரிவாயுவின் தேவை இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்களது மின்சாரத் தயாரிப்பில் புதைபடிவ எரிபொருட்களின் பங்கைக் குறைத்து வருவது உலகளாவிய அளவில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கப் பெரிதும் உதவும்.
பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கான 1.5°C வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்த, 2030ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் மின்சாரத்தை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனச் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வலியுறுத்தியுள்ளது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan